• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || “இனி மனைவி, குழந்தைகளை உடல் ரீதியாக தாக்கலாம்”

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || “இனி மனைவி, குழந்தைகளை உடல் ரீதியாக தாக்கலாம்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



குடும்ப சண்டையின்போது, மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்ற புதிய சட்டத்திற்கு ஆப்கானிஸ்தான் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) அமுல்படுத்தப்பட்டுள்ளது. தாலிபான் உச்சத் தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்ட இந்தச் சட்டம், ஜனவரி 2026-இல் அமுலுக்கு வந்துள்ளது.


 


இச்சட்டத்தின்படி, குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டையின்போது கணவன்மார் தங்கள் மனைவியரையும் குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கும் உரிமை பெறுகின்றனர். ஆனால், இத்தண்டனை எலும்பு முறிவு, தோல் கிழிவு அல்லது திறந்த காயங்கள் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. இவ்வாறு கடுமையான காயங்கள் ஏற்பட்டால் மட்டுமே, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபித்தால், கணவனுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.


 


 


இதற்கு மேல் எந்தவிதமான உளவியல் அல்லது பாலியல் வன்முறைக்கும் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி தந்தை வீடு அல்லது உறவினர் வீட்டிற்கு திரும்ப திரும்பச் சென்று தங்கினால், அவர்களும் அவர்களைத் திருப்பி அனுப்ப மறுத்த குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை பெறுவர்.


 


இது, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் புகலிடம் தேடுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சட்டத்தின் மற்றொரு அதிர்ச்சிகரமான அம்சம், சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிப்பதாகும்: மத அறிஞர்கள் (உலமாக்கள்), உயர் வர்க்கம் (அஷ்ரஃப்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம். குற்றத்திற்கான தண்டனை அதன் தீவிரத்தைப் பொறுத்து அல்லாமல், குற்றம் செய்தவரின் சமூக அந்தஸ்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.


உதாரணமாக, உயர் வர்க்கத்தினருக்கு எச்சரிக்கை அல்லது அழைப்பு மட்டுமே, கீழ் வர்க்கத்தினருக்கு சிறை மற்றும் உடல் தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் அமைப்பான ரவாதரி (Rawadari) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது., இச்சட்டத்தைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதே குற்றமாகக் கருதப்படுவதால், உள்ளூர் ஆர்வலர்கள் குரல் எழுப்ப அஞ்சுகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



Read More

Previous Post

தனியார் மற்றும் சர்வதேசப் பள்ளிகளில் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களின் விரிவாக்கம் ஆசிரியர் பற்றாக்குறையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது – Malaysiakini

Next Post

Gold Price | தங்கம் விலையில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம்..? விலை குறையுமா..? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price | தங்கம் விலையில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம்..? விலை குறையுமா..? | வணிகம் போட்டோகேலரி

Gold Price | தங்கம் விலையில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம்..? விலை குறையுமா..? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin