இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகையை நுவரெலியா மாவட்டத்தில் நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான அரச வெசாக் தினக் கொண்டாட்டத்தை மே 12ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தன்று நுவரெலியாவில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. R

