யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்குமிடையிலான இந்துக்களின் மோதலில் கிரிக்கெட்டில் ஏலவே வென்றிருந்த கொழும்பு இந்துக் கல்லூரி, தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியிலும் வென்றது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் வழமையான நேரத்தில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், பெனால்டியில் 7-6 என்ற ரீதியில் கொழும்பு இந்துக் கல்லூரி வென்றிருந்தது.

