• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இணையவழி குற்றம்: வெளிநாட்டவர்கள் 198 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இணையவழி குற்றம்: வெளிநாட்டவர்கள் 198 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி குற்றங்களுடன் (Cybercrime) தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் டிஜிட்டல் மோசடி நிலையங்களை இலக்கு வைத்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 173 இந்திய பிரஜைகளும், 25 நேபாள பிரஜைகளும் அடங்குகின்றனர்.


சுற்றிவளைப்பு விபரங்கள்:


காலி: அதிகளவிலான கைதுகள் காலியில் பதிவாகியுள்ளன. இங்கு இரண்டு தங்குமிடங்களில் தங்கியிருந்த 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.


ஹிக்கடுவை: தொடந்துவ பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் 35 இந்தியர்களும், 20 நேபாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 43 வயதுடைய ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர்களிடமிருந்து 25 கணினிகள், 119 கையடக்கத் தொலைபேசிகள், சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மிதிகம: கடந்த மே 11ஆம் திகதி பின்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 28 இந்தியர்கள் மற்றும் 5 நேபாளிகள் என 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.


மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் சட்ட நடவடிக்கை:


அனைத்து இடங்களிலிருந்தும் மொத்தமாக 83 கணினிகள் மற்றும் 198 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இவை மேலதிக தடயவியல் சோதனைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது. அத்துடன், இவர்கள் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை மற்றும் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களில் சிலரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வரி இல்லாத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



Read More

Previous Post

இது COVID-19-இலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? – Malaysiakini

Next Post

வண்டி வண்டியா பூசணிக்காய் காய்க்கணுமா? – விதையை இப்படி நட்டு பாருங்க…

Next Post
வண்டி வண்டியா பூசணிக்காய் காய்க்கணுமா? – விதையை இப்படி நட்டு பாருங்க…

வண்டி வண்டியா பூசணிக்காய் காய்க்கணுமா? - விதையை இப்படி நட்டு பாருங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin