
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

