குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், 8 ஆண்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (03) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த போது இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் .
குறித்த தொழிலாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
செ . தி . பெருமாள்


