
ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டால், கட்சியினருடன் கலந்துரையாடி பின்னர் அங்கு செல்வேன் என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எந்தவிதமான உத்தியோகபூர்வை அழைப்பையும் இதுவரையிலும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.

