ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று 916) முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.
“ஜனாதிபதி அனுர தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை” என மனோ கணேசன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம் வெளியான அடுத்த நாளே ஜனாதிபதி அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள மிக அவசரமான மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் விரிவாகப் பேச வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழுவை அடுத்த வாரம் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரடியாகக் கலந்துரையாடப்படவுள்ளது.


