நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) நேற்று சனிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது. திரையுலகினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமாரின் தாயார் மறைந்த செய்தியை அறிந்ததும், தமிழக முதல்வர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த மோகினி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். முதல்வர் விஜய்யுடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். (a)


