வருங்கால கணவர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் நிச்சயதார்த்தத்தோடு, திருமணத்தை முடிக்க விரும்புவதாக, பெண் ஒருவர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஆரம்பமானது . வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரி 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இணையத்தில் உலாவும் நேரத்தில் வாக்களிக்கத் தவறியதால், தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி பெண் ஒருவர் இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளார். (AN)

