குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைதுசெய்ததைச் சவாலுக்கு உட்படுத்தி, 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R