பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், இதன்போது பல்வேறு மோசடியாளர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.