March 27, 20259:09 AM IST
Tamil Live Breaking News : “வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா” – ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
அதிமுக (ஜெயலலிதா) அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரத்தில் அமித்ஷாவை – எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன் என்பதற்கான காணொளியை வெளியிட்டு இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தமிழ்நாட்டில் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா இருப்பதாகவும் புகழாரம்.
யார் எது வேண்டுமானாலும் கருத்தாக சொல்லலாம். ஆனால் சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரச்சாரம் மூலமாக அதிமுகவினர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார்

