• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News : வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

GenevaTimes by GenevaTimes
December 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Tamil Live Breaking News : வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




December 7, 2024, 12:42 pm IST

Tamil Live Breaking News : வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை மையம்!

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றுழத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், இது இலங்கை – தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் இன்று முதல் டிச.10 வரை மிதமான மழைக்கும், டிச.11 மற்றும் 12ம் தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 12ம் தேதி கரையை கடக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் தமிழ்நாடு கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

December 7, 2024, 9:54 am IST

Tamil Live Breaking News : 2 நாட்களில் விழுப்புரம் இயல்பு நிலைக்கு திரும்பும் – அதிகாரி தகவல்!

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பேக்கிங், தரம் உள்ளிட்டவை குறித்து அமுதா ஐஏஎஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்டு தற்போது சீர் செய்யப்பட்டுள்ள பகுதிகளில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

December 7, 2024, 9:53 am IST

Tamil Live Breaking News : மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

இந்திய கடற்பகுதிக்குள் பாய்மரப்படகுடன் தத்தளித்த மியான்மர் மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 18 ஆம் தேதி மியான்மரை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் இருந்த போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்தனர்.

விளம்பரம்
December 7, 2024, 9:53 am IST

Tamil Live Breaking News : சென்னை மாநகர பேருந்தில் கஞ்சா கடத்தல்!

சென்னை மாநகர பேருந்தில் 25 கிலோ கஞ்சா கடத்திய கேரளா இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மின்சார ரயில் மூலம் அம்பத்தூருக்கு 2 இளைஞர்கள் கஞ்சா கடத்தி வந்ததாக மதுவிலக்கு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பேருந்தில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கேரளாவை சேரந்த சூரஜ் மற்றும் ஷாம்நாத் என்ற இளைஞர்களை கைது செய்தனர்.

December 7, 2024, 9:52 am IST

Tamil Live Breaking News : மேட்டூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு!

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ள நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர். அணையின் 16 கண் மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ள கட்டுப்பாட்டு மையம், சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது.

December 7, 2024, 9:11 am IST

Tamil Live Breaking News : 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – அமைச்சர் சேகர்பாபு!

“2026 தேர்தலில் 200 தொகுதிகளில் அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். தமிழக அரசியல் அறியாமல் உள்ள சிலருக்கு கூறுகிறேன். 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும்.” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று நடந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், “கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
December 7, 2024, 9:01 am IST

Tamil Live Breaking News : “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன்”!

“புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அதனால், புஷ்பா 2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை. என் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன். எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் அருகே பட வெளியீட்டுக்கு முன் நடந்த பிரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

December 7, 2024, 8:58 am IST

Tamil Live Breaking News : திருச்சி: ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

திருச்சி ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் உரிய ஆவணம் இன்றி ரூ.75 லட்சம் பணத்துடன் வந்த தேவகோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

December 7, 2024, 8:56 am IST

Tamil Live Breaking News : 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்திய தெற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 12 ஆம் தேதி இலங்கை – தமிழ்நாடு கடலோரப்பகுதிக்கு அருகில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரக்கூடும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
  • First Published : December 7, 2024, 8:55 am IST

Read More

Previous Post

Tamilmirror Online || ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு

Next Post

பதிலடி கொடுத்தது இலங்கை அணி | sri lanka bounce back against south africa in test

Next Post
பதிலடி கொடுத்தது இலங்கை அணி | sri lanka bounce back against south africa in test

பதிலடி கொடுத்தது இலங்கை அணி | sri lanka bounce back against south africa in test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin