February 21, 20257:51 AM IST
Tamil Live Breaking News : விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் தலா ₹50,000 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். இந்த அபராதத் தொகை செலுத்திய 15 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து மீனவர்கள் கொழும்பு நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை வந்த 15 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.

