February 13, 20259:57 AM IST
Tamil Live Breaking News : நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 3 பேரூராட்சிகள்!
தமிழ்நாட்டில் மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாகவும், இதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி, பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும், இனி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

