
January 02, 20257:36 AM IST
Tamil Live Breaking News: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? – தமிழக அரசு பதில்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு நான்கு நாட்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதனை பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்த நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

