March 21, 20258:32 AM IST
Tamil Live Breaking News: சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர்.
வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறை தகவல். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

