March 26, 20253:54 PM IST
Tamil Live Breaking News : இந்தாண்டில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் போட்டு முடிக்கப்படும் : பேரவையில் ஐ.பெரியசாமி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சிக்கு வந்த பிறகு 1122 கோடியில் 3000 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாவும், 4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரத்தில் 545 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
குறிப்பாக, இன்னும் தமிழ்நாட்டில் 8 கிராமங்கள் தான் இணைக்கப்பபடாமல் உள்ளதாகவும், இவ்வளவு குறைவான கிராமங்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான் மட்டும் தான் என்றும் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தாண்டில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் போட்டு முடிக்கப்படும் என்று அறிவித்தார். முதலமைச்சர் என்றால் அழகு, அதுபோல முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் போடப்படும் சாலையும் அழகு என்று தெரிவித்தார்.

