
Tamil Live Breaking News: தாயகம் திரும்பிய குகேஷ் – உற்சாக வரவேற்பு
Tamil Live Breaking News: உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை மையம்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. நாளை(டிச.17) தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
Tamil Live Breaking News: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – முதலமைச்சர் எதிர்ப்பு
“ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; இந்திய அரசியலை மொத்தமாக மாற்றும் அச்சுறுத்தலுடன் வரும் மசோதா” என ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.
முக்கிய மசோதாவை நிறைவேற்ற பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும் முக்கிய பிரச்சனைகளை தீர்க்காத பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முயற்சி. மாநிலத் தேர்தல்கள் தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
Tamil Live Breaking News: பட்டத்துடன் தாயகம் திரும்பிய குகேஷ்
கோப்பையை வீட்டிற்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி. அனைவரும் வழங்கிய ஆதரவு புத்துணர்ச்சியை தந்தது என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியுள்ள குகேஷ் பேட்டி
Tamil Live Breaking News: சென்னை திரும்பிய குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துடன் சென்னை திரும்பிய குகேஷ். உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்.
Tamil Live Breaking News: செம்பரம்பாக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு. செம்பரம்பாக்கத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு. ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு
Tamil Live Breaking News: திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம்
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து விவசாயிகள் எர்ணாகுளம் – காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து போராட்டம்.
எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.
Tamil Live Breaking News: “அர்த்த மண்டபத்திற்குள் அனுமதியில்லை”
“ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை மட்டுமின்றி, அர்த்த மண்டபத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை”
கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜாவை வெளியேற்றிய ஜீயர்கள்; உற்சவர் வீற்றிருக்கும் அர்த்த மண்டபமும் கருவறையாக பாவிப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – ஆண்டாள் கோயிலில் இளையராஜாவை தடுத்து நிறுத்தியது சர்ச்சையான நிலையில் கோயில் நிர்வாகம் விளக்கம்
விரிவாக படிக்க:
அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!
Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை
Tamil Live Breaking News: காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்.
நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் இதுவரை உருவாகவில்லை. காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில்தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிப்பு. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Tamil Live Breaking News: அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை – விக்னேஷ் சிவன்
புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் எனது LIK படத்தின் படபிடிப்புக்கு அனுமதி கேட்க சென்றேன். மரியாதை நிமித்தமாக முதலமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சரை காணச் சென்றேன். தன்னுடன் வந்த மேலாளர் உணவகம் குறித்து அமைச்சருடன் பேசினார். அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்தது ஆனால் தேவையற்றது என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்
Tamil Live Breaking News: தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்
இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் (73) காலமானார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அமெரிக்காவில் காலமானார் “தால்” உள்பட ஏ.ஆர். ரகுமானின் இசையமைப்பிலும் பங்களிப்பை அளித்தவர்; பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர்.
Tamil Live Breaking News: வெள்ளப்பாதிப்பு: மாவட்ட நிர்வாகம் அறிவுரை
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ விடுமுறை விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
தாமிரபரணி கரையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளை உள்ளாட்சி அலுவலர்கள் ஆய்வுசெய்து, பாதுகாப்பை உறுதி செய்தபின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்; முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
