அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட 39 இடங்களிலும் தோல்வியடைந்தது
இதைத்தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தேசிய தலைமை தலையிட்டு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள பாஜக மைய குழு கூட்டம் கமலாலயத்தில் காலை 10.30 மணியளவில் அண்ணாமலை தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதில் பாஜக மாநில நிர்வாகிகள் மூத்த தலைவர்கள் என பல முக்கிய நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் தலைவர் என்ற முறையில் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)