March 19, 20257:59 AM IST
Tamil Live Breaking News: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை.
காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், இந்த விவரங்களை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழ்நாடு அரசு உத்தரவு

