
January 10, 202510:43 AM IST
Tamil Live Breaking News: “ரேஷன் கடைகள் இன்று செயல்படும்”
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
பொங்கல் தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது

