
February 12, 202510:46 AM IST
Tamil Live Breaking News : அதிமுக உட்கட்சி விவகாரம் – தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை – நீதிமன்றம்
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற தீர்ப்பு. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

