March 01, 202511:32 AM IST
Tamil Live Breaking News: பாமக சார்பில் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்
பாமக சார்பில் 18வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
வேளாண்துறைக்கு ரூபாய் 65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
நிதிநிலை அறிக்கையில் மொத்த மதிப்பில் 25 சதவீதத்தை வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு
நெல்லுக்கு ரூபாய் 3,500 கரும்புக்கு ரூபாய் 5000 கொள்முதல் விலையாக நிர்ணயம்
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் காவிரி பல்பொருள் அங்காடிகள் ஏற்படுத்தி ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்
நியாயவிலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை விநியோகம்
மாநில வேளாண் கொள்கை உருவாக்குதல்
வேளாண் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஒன்பது மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செல்வது என்எல்சி சுரங்க விரிவாக்கம் அரியலூர் புதிய சிமெண்ட் ஆலைகளுக்கு தடை
கிழக்குக் கடற்கரை சாலை பகுதி பாதுகாக்கப்பட்ட பறவை வாழ்விடமாக மாற்றப்படும்
காலநிலை மாற்றத்தை சமாளிக்க திறன்மிகு வேளாண்மை திட்டம்
மணல் குவாரிகள் மூடுவதற்கு இறக்குமதி மூலம் தடையில்லா மணல் விநியோகம்
வேளாண் கல்விக்கான ஆராய்ச்சி கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களும் வேளாண் கல்வியில் புதிய மூன்று பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட வேண்டும்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை – அதில் வேளாண் பணிகளுக்கு குடியுரிமை
வேளாண் துறை மூன்று அமைச்சகங்களாக பிரிப்பது
இயற்கை வேளாண்மை எனும் புதிய தொகையை உருவாக்குவது
சூரிய ஒளி மின்சாரம் மோட்டாரர்கள் இலவசம்
உள்ளிட்ட 80 தலைப்புகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

