தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில், பெரும்பாலான கட்டடங்கள் கடும் சேதமடைந்த நிலையில், தைவானின் மிக உயரமான கட்டடமான தைபே 101 (Taipei 101) கட்டடம் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தப்பித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதனுள் வைக்கப்பட்டிருக்கும் 660 மெட்ரிக் டன் எடை கொண்ட எஃகு உருண்டையே. இந்த எஃகு உருண்டையானது, 1,600 அடிகொண்ட இந்தக் கட்டடத்தில், தரையிலிருந்து மேலே 1,000 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
`டேம்பர் பேபி (Damper Baby)” என்று அழைக்கப்படும் இந்தப் பெண்டுலம், கட்டடத்தின் 87-வது தளத்துக்கும 92-வது தளத்துக்கும் இடையில் 42 எஃகு அடுக்குகளிலிருந்து கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறது. இந்த பெண்டுலனமானது, நிலநடுக்கமோ அல்லது புயல் வீசும்போதோ கட்டடத்தின் இயக்கத்தை எதிர்க்கும் வகையில், 40 சதவிகிதம் வரை கட்டடம் ஊசலாடுவதைக் குறைக்கிறது.

