Last Updated:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 உலக கோப்பை போட்டியில் 147 ரன்களில் நெதர்லாந்து ஆல்அவுட்டானது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 உலக கோப்பை போட்டியில் 147 ரன்களில் நெதர்லாந்து ஆல்அவுட்டானது.
ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று காலை 11 மணிக்கு கொழும்புவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ் ஓடவுட், மைக்கேல் லெவிட் களமிறங்கினர்.
சல்மான் மிர்சா வீசிய 4-வது ஓவரில் மேக்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மைக்கேல் லெவிட் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கொலின் அக்கர்மன் 20 ரன்களில் அவுட்டாக 10 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை சேர்த்தது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாஸ் டி லீட் 30 ரன்களில் கிளம்பினார். தொடர்ந்து, ஸ்கார்ட் எட்வர்டு 37 ரன்களிலும், ஜாக் லயன் கேஷெட் 9 ரன்களிலும், லோகன் வான் ரன் எதுவும் எடுக்காமலும், ரோலோஃப் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் ஆர்யன் டட் 13 ரன்களிலும், பால்வான் டக் அவுட்டாக 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 147 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகளையும், முஹம்மது நவாஸ், அப்ரார் அஹமது, சலீம் அய்யூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரீடி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Feb 07, 2026 12:37 PM IST


