Last Updated:
டி20 உலகக் கோப்பை இந்தியா, இலங்கையில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான்-நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்-ஸ்காட்லாந்து, இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் இன்று தொடங்கி, மார்ச் 8 வரை நடைபெறும். முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. காலை 11 மணிக்கு கொழும்புவில் தொடங்கும் முதல் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 2009 மற்றும் 2014-ல் இங்கிலாந்தையும், 2022-ல் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து இன்றும் மேஜிக் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில், சிக்ஸர் மன்னர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. கடந்த 2022 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெளியேற்றிய ஸ்காட்லாந்து, இன்றும் அதே அதிரடியைத் தொடரக் காத்திருக்கிறது.
இதற்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் இன்று துவங்குகிற நிலையில் அதனை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு Google Doodle-ஐ கூகுள் வெளியிட்டுள்ளது.


