டி20 உலக கோப்ப கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.
நியூயார்க்கின் நாசா கவுண்டி மைதானத்தில் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் “டி” பிரிவில் இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரான நோர்க்கியா 4 ஓவர்கள் வீசிய நிலையில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 12.5 ஓவர்களில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சற்று சமாளித்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் 16.2 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
