Last Updated:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மலைக்க வைத்த ஜிம்பாப்வே அணி, இலங்கைக்கும் அதிர்ச்சி தோல்வி தந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மலைக்க வைத்த ஜிம்பாப்வே அணி, இலங்கைக்கும் அதிர்ச்சி தோல்வி தந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு, பிரையன் பென்னட் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 45 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட, ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள அணிகளில் ஒன்றான இலங்கையையும் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. தகுதிச் சுற்று மூலம் போட்டிக்குள் நுழைந்து சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்த ஒரே அணி என்ற பெருமையையும் ஜிம்பாப்வே அணி பெற்றுள்ளது.
முன்னதாக, கொல்கத்தாவில் நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 28 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், மொத்தம் 75 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஜிம்பாப்வே போல் தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில், கனடாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் குவித்த நிலையில், அவர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 118 ரன்களுக்கு சுருண்டது கனடா.


