• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

T20 WC 2024: கனடாவுடன் இந்திய அணி இன்று மோதல்

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
T20 WC 2024: கனடாவுடன் இந்திய அணி இன்று மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


620

ICC T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (15) கனடாவுடன் மோதுகிறது.

ICC T20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8.00 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் ‘A’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – கனடா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுகடைசி லீக் ஆட்டம்.

இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதேவேளையில் கனடா 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். IPL தொடரில் 700 ஓட்டங்களை வேட்டையாடிய விராட் கோலி நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். 3 ஆட்டங்களிலும் அவர், 5 ஓட்டங்களே எடுத்துள்ளார். அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எனினும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயோர்க் நசாவு கண்டி மைதானம் போன்று லாடர்கில் ப்ரோவார்ட் கவுண்டி மைதானம் கிடையாது.

இதனால் விராட் கோலியிடம் இருந்த சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 35 பந்துகளில் 31 ஓட்டங்கள் சேர்த்த ஷிவம் துபே, முதல் இரு ஆட்டங்களிலும் முறையே 36, 42 ஓட்டங்கள் எடுத்த ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் ஒரு முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.

பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்கக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் அணிகள் எவை? – ICC T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை ‘A’ பிரிவில் இருந்து இந்தியா, ‘B’ பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா, ‘C’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், ‘D’ பிரிவில் இருந்து தென் ஆபிரிக்கா என 5 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் எவை என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். லீக் சுற்று 18ஆம் திகதி நிறைவடையும் நிலையில் சூப்பர் 8 சுற்று 19ஈம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதக்கூடிய அணிகளின் விவரம் தெரியவந்துள்ளது. இதன்படி சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20ஆம் திகதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 2-வது ஆட்டத்தில் லீக் சுற்றில் ‘D’ பிரிவில் 2ஆவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் 22ஆம் திகதி நடைபெறுகிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 24ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.



Read More

Previous Post

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

Next Post

ADMK Boycotts Vikravandi By-Election: ’துணி துவைக்க கூட திமுக ரெடி!’ தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி!-aiadmk ex minister jayakumar interviewed about vikravandi by election boycott

Next Post
ADMK Boycotts Vikravandi By-Election: ’துணி துவைக்க கூட திமுக ரெடி!’ தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி!-aiadmk ex minister jayakumar interviewed about vikravandi by election boycott

ADMK Boycotts Vikravandi By-Election: ’துணி துவைக்க கூட திமுக ரெடி!’ தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி!-aiadmk ex minister jayakumar interviewed about vikravandi by election boycott

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin