• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 WC பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்தை 60 ரன்களில் வென்றது இந்தியா! | t20 world cup warm up india beats bangladesh

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
T20 WC பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்தை 60 ரன்களில் வென்றது இந்தியா! | t20 world cup warm up india beats bangladesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை 60 ரன்களில் வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது இந்தியா. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது.

அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா 40 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன், 28 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்தியா 60 ரன்களில் வெற்றி பெற்றது.

பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 8 பவுலர்களை பயன்படுத்தினார். இதில் அர்ஷ்தீப் மற்றும் ஷிவம் துபே என இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ், அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் மற்றும் ரோகித் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இதில் சஞ்சு, 1 ரன்னில் எல்பிடபள்யூ ஆனார். 7-வது ஓவரில் ரோகித் சர்மா 23 ரன்களில் வெளியேறினார். முதல் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 92 ரன்களைச் சேர்த்திருந்தது. அரைசதம் கடந்த ரிஷப் பந்த் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் – ஷிவம் துபே பொறுப்பாக விளையாடிக்கொண்டிருக்க, 15-வது ஓவரில் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார் துபே. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி மிரட்டினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் விக்கெட்டானார். 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 165 ரன்களைச் சேர்த்திருந்தது.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இணைந்து ரன்களை உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதீஹசன், ஷரிஃபுல் இஸ்லாம், மஹ்முதுல்லா, தன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



Read More

Previous Post

ஜூன் 3 முதல் உயரும் சுங்கக் கட்டணம்- தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

Next Post

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்… மாதந்தோறும் வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Next Post
ஒருமுறை முதலீடு செய்தால் போதும்… மாதந்தோறும் வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்... மாதந்தோறும் வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin