Last Updated:
இன்று மாலை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது இந்திய அணி.
இன்று மாலை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது இந்திய அணி.
ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அரையிறுதியில் இரு அணிகளும் கடுமையாகப் போராடி சிறந்த அணிகளை வீழ்த்து இறுதிக்குள் நுழைந்திருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். நியூசிலாந்து சிறந்த அணியாக இருந்தாலும் அதற்கேற்ப இந்திய அணியும் தயாரிப்புகளைக் கொண்டுள்ளதாக சூர்யகுமார் கூறியுள்ளார்.
அகமதாபாதில் 1 லட்சம் பார்வையாளர்கள் வரவுள்ள நிலையில் 2023-ல் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியதைப் போல் தாங்களும் சிறந்த ஆட்டத்தால் கூட்டத்தை அமைதியாக்குவோம் என சான்ட்னர் கூறியதற்கு, வேறு ஏதாவது புதிய உத்தியைக் கண்டுபிடிக்கலாம் என சூர்யகுமார் விமர்சித்தார்.
ஒரு லட்சம் வாக்காளர்களை அமைதியாக்கிவிடுவோம் என்பது போன்ற உத்திகளைக் கைவிட்டு நியுசிலாந்து அணி, புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார்.
இன்றைய போட்டியில் வென்றால் டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும்.


