பாகிஸ்தான் நமீபியாவிடம் தோற்றால், தொடரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஏனென்றால், ஒருவேளை நமீபியா வெற்றி பெற்றால், அதிக ரன் ரேட் வைத்துள்ள அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உருவாகும். அதேபோல், இன்று மாலை நடைபெறும் போட்டியில், பாகிஸ்தானை நமீபியா அணி வீழ்த்துவதுடன், இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் வெற்றியை நெதர்லாந்து அணி பெறும்பட்சத்தில், அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதனால், இன்றைய போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


