இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ராம் மிகவும் சோகமாகத் தெரிந்தார். அரையிறுதிக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை. நியூசிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு, மார்க்ராம் கூறுகையில், “நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசினர். அவர்களின் பந்துவீச்சு வெற்றிக்கு கைகொடுத்தது. மேலும் ஒரு பேட்ஸ்மேன் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை விளையாடும்போது, போட்டி பெரும்பாலும் உங்கள் வழியில் செல்லாது.” என்றார்.


