Last Updated:
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. மொத்தம் 4 குரூப்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றன.
அதன் தொடர்ச்சியாக மொத்தம் 40 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் இன்று சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற போட்டி இன்று இலங்கையின் கொழும்புவில் நடைறெவிருந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை. அதைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Feb 21, 2026 10:59 PM IST

