Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் திரும்ப திட்டம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைப்பு.
சர்வதேச விண்வெளி மையத்தில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றவர்கள், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதால், சுமார் 9 மாதங்களாக பூமி திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு எலான் மஸ்க்கிற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், வரும் 16 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.20 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து டிரான் விண்கலத்துடன் சீறிபாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், சுனிதாவை பூமிக்கு கொண்டு வரும் க்ரூ-10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்து விட்டு, இந்திய நேரப்படி நாளை அதிகாலை மீண்டும் ராக்கெட்டை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
March 13, 2025 8:40 AM IST