ஸ்டெண்ட் என்றவுடன், மாரடைப்பு சிகிச்சை போல இதிலும் ஒரு கருவி ரத்தநாளத்தில் பொருத்தப்படும் என நினைக்க வேண்டாம். ஏனெனில், பக்கவாதம் என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை குறிக்கிறது. இப்படி ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படும்போது, அந்த அடைப்பை சரிசெய்ய ‘Stent Clot Retriever’ (க்ளாட் ரிட்ரைவர்) கருவி பயன்படுத்தப்படும் (அடைப்பு நீக்கப்பட்ட பின், கருவி வெளியே எடுக்கப்பட்டுவிடும்). இதுவே, ரத்த நாளங்கள் ஏதேனும் காரணங்களால் சுருங்கியிருந்தால், அப்போது ஸ்டெண்ட் கருவி பொருத்தப்பட்டு அது விரிவாக்கப்படும். அடைப்பு வேறு, சுருங்குதல் வேறு என்ற வித்தியாசத்தை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி எய்ம்ஸில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது Clot Retriever-தான். இது அடைப்பை நீக்க உதவுகிறது.


