Last Updated:
ஸ்டார்லிங்க் உட்பட இந்திய சந்தைக்கு வரும் அனைத்து நிறுவனங்களும், இந்திய நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள மத்தியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதுதொடர்பான தங்களின் நிலைப்பாட்டை இன்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளது. அதில் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்வதையும், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதையும் வரவேற்பதாக ரிலையன்ஸ் கூறியுள்ளது. இதனால், செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவை வழங்கும் துறையில் புதிய நிறுவனங்கள் வருவதற்கும், போட்டி அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோ உட்பட அனைத்து நிறுவனங்களும் இந்திய மக்களுக்குச் சேவை செய்வதுடன், நாட்டின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
Statement from Reliance Industries
In light of recent remarks about Reliance and the Indian market, we wish to place the facts on record.Like every Indian enterprise, Reliance has grown in an India that welcomes investment and innovation, homegrown or international, that improve the lives of the people.
That openness rests on the rule of law. As the Government of India has stated, it applies the same process to every applicant, Indian or foreign. Jio’s own satellite services await clearances.
At Reliance, we have never feared competition. We see it as the truest test of who serves the customer best. Jio itself entered India’s crowded telecom market in 2016 as the newest player, with not a single customer. In just ten years, Jio has earned the trust of over 530 million customers and given Indians some of the best digital infrastructure and most affordable data in the world.
We welcome competition in satellite communications, including Starlink. Every player, Jio included, must serve the people of India and abide by the laws and policies of the land.
— Reliance Industries Limited (@RIL_Updates) October 16, 2026
ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் வருவது தடுக்கப்படுவது தொடர்பாக எலான் மஸ்க் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் தங்களின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேலும், “இந்தியாவில் போட்டி உருவாவதை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. வாடிக்கையாளருக்கு யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதற்கான உண்மையான சோதனைதான் போட்டிகள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஜியோவே 2016-ல் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல், ஒரு புதிய போட்டியாளராக இந்தியாவின் நெரிசலான தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது. வெறும் பத்து ஆண்டுகளில், ஜியோ 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியர்களுக்கு உலகின் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மிகவும் மலிவு விலையில் டேட்டாவை வழங்கியுள்ளது. இப்படியான சூழலில் ஸ்டார்லிங்க் உட்பட செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோ உட்பட ஒவ்வொரு போட்டியாளரும் இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் மற்றும் நாட்டின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.


