Last Updated:
SIR vs SSR voter list | தமிழ்நாட்டில் நடைபெறும் S.I.R மற்றும் S.S.R வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கும் வழக்கமாக நடைபெறும் சிறப்பு சுருக்க முறை பட்டியல் திருத்தத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தற்போது பார்க்கலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தமான S.S.R என்பது ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள S.I.R-ஓ, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியல் நிறுத்தி வைக்கப்படாது. ஆனால் S.I.R-ல், வாக்காளர் பட்டியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது வாக்காளரின் உண்மைத்தன்மையை பலமுறை உறுதிப்படுத்தும் நடைமுறை இல்லை. ஆனால் S.I.R-ல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளரின் வீட்டுக்கு 3 முறை சென்று உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவார்கள்.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவை மேற்கொள்ளப்படும். ஆனால் எஸ்.ஐ.ஆர்-ல் புதிதாக பெயர் இணைப்பதோ, திருத்தங்கள் மேற்கொள்வதோ இயலாது.
ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
October 28, 2025 2:38 PM IST
SSR Vs SIR | சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் சிறப்பு சுருக்க முறை பட்டியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?


