• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Sri Lanka Election | இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: ஏறுமுகத்தில் சஜித்; இறங்கு முகத்தில் அனுர குமார… என்ன நடக்கிறது?

GenevaTimes by GenevaTimes
September 22, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Sri Lanka Election | இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: ஏறுமுகத்தில் சஜித்; இறங்கு முகத்தில் அனுர குமார… என்ன நடக்கிறது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதில் கடும் போட்டி நிலவிவருகிறது. இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் 50%-க்கும் மேல் வாக்குகளைக் கொண்டிருந்த அனுர குமார திசநாயக்கவின் வாக்கு சதவீதம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அவருக்கு சஜித் பிரேமதாசா கடும் போட்டி அளித்து வருகிறார்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை நிலவரத்தில், எதிர்பாராவிதமாக இலங்கையின் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். மேலும், மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் அனுர குமார முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, இலங்கையின் முக்கிய முகங்களான தற்போதைய அரசின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 29%-க்கு குறைவாகவும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க 17%-க்கு குறைவாகவும், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் 3% அளவிலும் வாக்குகளை பெற்றிருந்தனர்.

விளம்பரம்

இதனால், அனுர குமார திசநாயக்க அமோக வெற்றிபெறுவார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்றாற் போல், இலங்கையில் பல பகுதிகளில் குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அனுர குமார திசநாயக்கவுக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.

தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் அனுர குமார திசநாயக்கவுக்கு திடீர் சரிவு ஏற்பட்டது. அவர் 45.4% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அனுர குமார-வின் வாக்கு சதவீதம் குறைந்த அதேவேளையில் எதிர்க்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசா வாக்குகள் அதிகரித்தது. அவர் 30.1% வாக்குகள் பெற்றார்.

விளம்பரம்

நேரம் செல்ல செல்ல இதே ட்ரெண்ட் நீடித்தது.  12.30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் காட்சிகள் மாறியது.
இலங்கை தேர்தல் ஆணைய இணையதள தகவலின்படி, முதலிடத்தில் இருந்த அனுர குமார திசநாயக்கவுக்கு, சஜித் பிரேமதாச கடும் போட்டி அளித்தார். இதனால், அனுர குமார திசநாயக்க தற்போது 39.52% வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், சஜித் பிரேமதாச 34.28% வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு சதவீதம் 5.6% என்ற அளவிலேயே உள்ளன.

Also Read |
Sri Lanka Election | இலங்கையில் ஆட்சியமைக்கும் இடதுசாரி கூட்டணி… அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க?

விளம்பரம்

இதனால் இலங்கையில் அடுத்த அதிபர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்க  17.41%, அரியநேத்திரன் 3.07% என்ற அளவில் உள்ளனர்.

வாக்கு சதவீதம் குறைந்தாலும் அனுர குமார திசநாயக்க தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறார். அதேநேரம் 50% சதவிகித வாக்குகளை ஒரு வேட்பாளர் பெறாவிட்டால், 2வது 3 வது விருப்ப வாக்குகளை எண்ணப்படும். அதனால் தேர்தல் வெற்றி அறிவிப்பு தள்ளிப்போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், முழு முடிவுகள் வெளியான பிறகே அங்கு யார் அதிபர் ஆவார் என்பது தெரியவரும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

லெபனானில் பேஜர் தாக்குதலில் தொடர்புடைய 7 மொழி தெரிந்த பெண் சிஇஓ தலைமறைவு | CEO cristiana barsony absconding linked to pager attacks in Lebanon

Next Post

இலங்கை அதிபர் தேர்தல் – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை | Sri Lanka elections result: Dissanayake leads in presidential vote

Next Post
இலங்கை அதிபர் தேர்தல் – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை | Sri Lanka elections result: Dissanayake leads in presidential vote

இலங்கை அதிபர் தேர்தல் - தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை | Sri Lanka elections result: Dissanayake leads in presidential vote

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin