• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Speed Post கட்டணங்களை மாற்றிய தபால் துறை..! ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டணம் அமல்..! | India Post New Rules From August 1: What Counts as a Document vs Parcel, Speed Post Charges, and Key Changes Explained

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Speed Post கட்டணங்களை மாற்றிய தபால் துறை..! ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டணம் அமல்..! | India Post New Rules From August 1: What Counts as a Document vs Parcel, Speed Post Charges, and Key Changes Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Speed Post கட்டணங்களை மாற்றிய தபால் துறை..! ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டணம் அமல்..!

இந்தியாவில் குக்கிராமம் வரை பரந்து விரிந்த ஒரு நெட்வொர்க்காக தபால் சேவை இருக்கிறது. தபால் அனுப்புவது , கடிதம் அனுப்புவது போன்றவை குறைந்துவிட்டாலும் பார்சல் மற்றும் ஸ்பீட் போஸ்ட் எனப்படும் விரைவு தபால் போன்ற சேவைகளுக்கு மக்கள் இன்று கூட தபால் துறையை தான் நம்புகின்றனர்.

அரசின் ஆவணங்களான பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிகள் அனுப்பும் ஆவணங்கள் ஆகியவை தபால் துறை மூலமே அனுப்பப்படுகின்றன. அதே போல தற்போது துணி பிஸ்னஸ் போன்ற சிறு தொழிலில் ஈடுபடும் பலரும் கூட ஸ்பீட் போஸ்ட்டை தான் பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றது தபால் துறை.

Speed Post கட்டணங்களை மாற்றிய தபால் துறை..! ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டணம் அமல்..!

இந்திய தபால் துறை, விரைவு தபால் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. முதல் முறையாக ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும் தனி தனி கட்டணங்களையும் தபால் துறை வெளியிட்டு உள்ளது.

இதுநாள் வரை ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கு என வரையறை இல்லாததால் பொதுமக்கள் ஆவணங்களை அனுப்பினாலும் பார்சல் கட்டணங்களையே செலுத்த வேண்டி இருந்தது. தற்போது அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத பொருட்கள் அதாவது கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம். அதே வேளையில் வணிகப்பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக வங்கி பாஸ்புத்தகம், செக் புக், வங்கி கணக்கு அறிக்கை. பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் ‘ஆவணம்’ என்ற பிரிவில் இடம்பெறும். அதேபோல், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்த பிரிவில் சேர்க்கப்படும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும் என தபால் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேர விரைவு தபால் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் சென்று சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

24 மணி நேர விரைவு தபால் சேவையில், சாமானிய மக்களுக்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து 38 முதல் 186 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப 38 ரூபாயும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப 94 ரூபாயும் வசூலிக்கப்படும். இதுவே எடை அதிகமாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்.

48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு 61 முதல் 121 ரூபாய் வரை இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவைக்கான கட்டணம் 38 முதல் 100 ரூபாய் வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் 48 முதல் 72 ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Share This Article

English summary

India Post New Rules From August 1: What Counts as a Document vs Parcel, Speed Post Charges, and Key Changes Explained

Speed Post கட்டணங்களை மாற்றிய தபால் துறை..! ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டணம் அமல்..!- India Post will implement new rules from August 1 to clearly define what qualifies as a document and what must be sent as a parcel, reducing confusion for customers.

Story first published: Wednesday, July 29, 2026, 13:16 [IST]

Other articles published on Jul 29, 2026

Read More

Previous Post

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

Next Post

ஆணை வழங்கப்பட்டால் BN, PN தேர்தல் அறிக்கைகளை ஒருங்கிணைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ஜாஹிட்

Next Post

ஆணை வழங்கப்பட்டால் BN, PN தேர்தல் அறிக்கைகளை ஒருங்கிணைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ஜாஹிட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin