வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில், கணவருடன் சுற்றுலா வந்த பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண், கணவருடன் டூவிலரில் உலகம் முழுவதும் சுற்றுலா பயணம் மேற்க்கொண்டு உள்ளார். நேற்று இரவு இருவரும் , தும்கா மாவட்டத்தின் குரும்ஹட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 8 முதல் 10 பேர் கொண்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டனர். அப்போது, கணவனை தாக்கி பெண்ணை இழுத்துச் சென்ற அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர்.
காயமடைந்த பெண், அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை நிறுத்தி உதவி கேட்டுள்ளார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement