• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..! |South Korea: Military rule announced; impeach President

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..! |South Korea: Military rule announced; impeach President
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிட்டதட்ட 10 நாள்களுக்கு முன்பு, தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், “எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்படுகிறது” என்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார். இருந்தும், அவர் மீது இருந்த அதிருப்தி பெருகிக்கொண்டே வந்தது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர்...

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர்…

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை, “என் முடிவால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு என்னுடைய உண்மையான மன்னிப்புகள்” என்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் இயோல்.

இன்று கூடிய தென் கொரியா நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக இயோலுக்கு எதிரான பதவி நீக்க மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா வாக்கெடுப்பில் மொத்த தென் கொரியா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 300. இந்த மசோதாவிற்கு 200 வாக்குகள் இருந்தால் போதுமானது. ஆனால், இன்று கூடிய கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு 203 வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால், யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவின் வாக்கெடுப்பில் இயோலின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததால், அப்போது பதவி நீக்கத்தில் இருந்து இயோல் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

பிணையில்லா விவசாயக் கடன் உச்சவரம்பு ரூ 2 லட்சமாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு | RBI Increases Collateral-Free Agricultural Loan Limit from Rs.1.6 to Rs.2 Lakh

Next Post

பேராக், ஜொகூர், பகாங் ஆகிய இடங்களில் இன்று காலை நிலைமை மாறாமல் உள்ளது – Malaysiakini

Next Post
பேராக், ஜொகூர், பகாங் ஆகிய இடங்களில் இன்று காலை நிலைமை மாறாமல் உள்ளது – Malaysiakini

பேராக், ஜொகூர், பகாங் ஆகிய இடங்களில் இன்று காலை நிலைமை மாறாமல் உள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin