“இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், ரஷ்ய – உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி… என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் ‘ராணுவ ஆட்சி அமல்’ அறிவிப்பு.
நேற்று இரவு தொலைக்காட்சி திரையில் தோன்றிய தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், “எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்படுகிறது.

