அமெரிக்காவில் அடுத்தடுத் 4 நடிகைகள் மர்மான முறையில் மரணம் அடைந்தது பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது**.**
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மயாமியில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் சோபியா லியோன். இவரது முன்னோர்கள் மெக்சிகோவை பூர்விகமாக கொண்ட லத்தின் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 18 வயதில் திரைத்துறைக்கு வந்த அவர் அடல்ட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஈவில் ஏஞ்சல், ஹார்ட் எக்ஸ், ரியாலிட்டி ஜங்கிஸ் உள்ளிட்ட பல்வேறு ஸடுடியோக்களில் பணியாற்றினார். அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த இவர், தனது 26 ஆவது வயதில் உயிரிழந்திருப்பது அவரது ரசகிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி நியூமெக்சிகோவின் அல்புகர்கியில் உள்ள அவரது அபார்ட்மென்ட்டில் சோபியா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சோபியாவை செல்போனில் தொடர்ந்து அழைத்தும் போனை எடுக்காததால், அவரது குடும்பத்தினர் அவர் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு சென்று பார்த்தனர். அங்க, அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால், சோபியா தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது வளர்ப்புத் தந்தை உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சோபியாவின் வளர்ப்புத் தந்தை மைக் ரோமெரோ அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அவரது உயிரிழப்பு வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் அடல்ட் சினிமாத்துறையில் அடுத்தடுத்து 4 நடிகைகள் மிக இளம் வயதில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read; மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட பிரபல நட்சத்திர நடிகை.. வீடியோ வைரல்..!
கடந்த மாதம் 36 வயதான அடல்ட் திரை நட்சத்திரம் காக்னி லின் கார்ட்டர் என்பவர் ஓஹியோவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதேபோல் ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் ஆகிய 2 நடிகைகளும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அமெரி க்காவின் பிரபல அடல்ட் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் இது சீரியல் கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல் நடிகைகளின் உயிரிழப்பு அமெரிக்க நடிகைகளிடையே பீதியை கிளப்பியுள்ளது. நடிகைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? கொலையாளி யார்? எதற்காக கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…