தற்போது மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்து வருவதால், பல குடும்பங்கள் அதிக மின்சாரக் கட்டணச் சுமையால் சிரமப்படுகின்றன. குறிப்பாகக் கோடைக் காலத்தில் ஏசி (AC), கூலர் மற்றும் குளிர்சாதனப் பெட்டி (fridge) போன்ற மின்சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், மாதாந்திர மின்சாரக் கட்டணம் ஆயிரக்கணக்கான ரூபாயை எட்டுகிறது. இதனால், மின்சாரச் செலவைக் குறைக்கப் பலரும் சூரிய ஆற்றல் (solar power) அமைப்புகளைப் பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டின் கூரையில் சோலார் பேனல்களைப் பொருத்துவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும். இச்சூழலில், ‘பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா’ (Pradhan Mantri Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் மத்திய அரசும் மானியம் வழங்கி வருகிறது. இருப்பினும், வீட்டிற்குப் பதிலாகக் கடையின் கூரையில் சோலார் பேனல்களைப் பொருத்தினால், இந்த அரசு மானியம் கிடைக்குமா? என்று பலருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. ‘நியூஸ்18 குஜராத்தி’ (News18 Gujarati) செய்தியில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.


