குழந்தைகளின் நலன் கருதி சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு ஆஸ்திரேலியா தான். கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையைக் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளன.


