ஆனால், கடைசி நேரத்தில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, தேதி குறிப்பிடப்படாமல் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பலாஷ் முச்சலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்பிறகு, இருவருக்கும் இடையிலான திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள், வதந்திகள் என சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கின.


