Last Updated:
தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு ஏன் நீட்டிக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வியாழக்கிழமை வழக்கை விசாரிப்பதற்கு பதிலாக ஜனவரி 30-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு திமுக தரப்பில் ஆஜரான கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் சுமார் 88% பேருக்கு, அவர்களது பெயர்கள் ஏன் நீக்கப்படக்கூடாது என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் முறையான நோட்டீஸ் அனுப்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
உரிய விளக்கம் அளிக்க மக்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது போல, தமிழ்நாட்டிற்கும் ஏன் மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது? என்று வினவினர்.
SIR | வாக்காளர்கள் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்களுக்கு அவகாசம் நீடிப்பு? – தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி


